2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

மாவிலாறில் 309 பேர் மீட்பு

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையில் உள்ள மாவிலாறு ஒரு பகுதி உடைந்ததில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படை மீட்டுள்ளது.

கனமழை காரணமாக மாவிலாறுவின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை (30) அன்று உடைந்ததை அடுத்து, வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர்.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பேரழிவால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கல்கந்த கோயில் வளாகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் மூதூர் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் ஒரு கடற்படை தரையிறங்கும் கப்பல் மற்றும் ஒரு தரையிறங்கும் படகு மற்றும் ஒரு கடலோர ரோந்து படகு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X