Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம் பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மோசடிகள் தொடர்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நிஷாந்த ரணதுங்க, காலிங்க இந்திரதிஸ்ஸ ஆகியோருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படும் என, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால், நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் நிறுவனத்தின் மனித உரிமைகள் முகாமையாளர் மற்றும் நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் ஆகியோரிடமும், இது தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது தொடர்பில், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago