2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மஹிந்தவின் சீசெல்சுக்கான 2 விஜயங்களிலும் ரூ.100 மில். செலவு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சீசெல்சு தீவுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு உத்தியோகப்பூர்வ விஜயங்களின் போதும் அரசாங்கத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தகவல் வெளியாகின.

சீசெல்சில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், முன்னாள் ஜனாதிபதியின் விஜயம் குறித்தான அறிக்கையை கடந்த வாரம் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதியும் அவரின் புதல்வர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் சீசெல்சுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் இதற்கு 50 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்ததாகவும் அரச தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு சீசெல்சில் அமைக்கப்பட்ட இலங்கை உயர் ஸ்தானிகராலயம், ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் மற்றும் இலங்கை வங்கி கிளை ஆகியவற்றை திறந்து வைப்பதற்காக, 97 அங்கத்தவர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவுடன் முன்னாள் ஜனாதிபதி, இரண்டாவது தடவையாகவும் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதும் 50 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கிளை தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் இலங்கை வங்கி கிளை பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது விஜயத்தின் போது, 68 வாகனங்களும் 68 அலைபேசிகளும் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அலைபேசிகள் அனைத்தும் கையளிக்கப்படாமல், மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விஜயத்துக்காக மூன்று விமானங்கள் மற்றும் தீவுகளுக்குள் பயணிப்பதற்காக 3 சொகுசு படகுகளும் குத்தகைக்கு பெறப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5