2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மஹிந்தவும் செல்கிறார் கமகேயும் செல்கிறார்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவில் இடம்பெறவிருக்கின்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச கூட்டமைப்பின் மாநாட்டில், கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் பங்கேற்கவிருகின்றனர்.

இவ்விருவரும், இன்று வியாழக்கிழமை பயணமாகவுள்ளனர். ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேசக் கூட்டமைப்பின் மாநாட்டின் நிலையியற் குழுவின் உறுப்பினராக அமைச்சர் தயா கமகே செயற்படுகின்றார்.

இதேவேளை, பெண் உறுஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச கூட்டமைப்பின் பெண் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினராகவே பிரதியமைச்சர் அனோமா கமகே பங்கேற்கவிருகின்றார்.

இது இவ்வாறிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்கவிருக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .