2025 ஜூலை 09, புதன்கிழமை

மாமியாரை கொலைசெய்த மருமகன் விளக்கமறியலில்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

என் ஜெயரட்ணம்

மாமியாரை பொல்லால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  நபரை,  இம்மாதம்  24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  களுத்துறை நீதிமன்ற பிரதான நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டுள்ளார்.           

மனைவியின் தாயான   களுத்துறை, கட்டுக்குருந்தை, சென் செபாஸ்டியன் வீதியில் வசித்துவந்த, 53 வயதான செல்லய்யா வள்ளியம்மா என்ற பெண்ணை, குறித்த நபர், பொல்லால் தாக்கி கொலை செய்தாரென,  பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில்,  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, நேற்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில், களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .