2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாவிலங்குதுறையில் ‘கபாலி குழு’

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

 

வீடுகளை உடைத்துக் கொள்ளையிடுதல், மதுபோதையில் பெண்களிடம் சேஷ்டை செய்தல், வீதிகளில் செல்​வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்​வேறான துன்புறுத்தல்களையும் குற்றச்செயல்களையும், கபாலி குழு முன்னெடுத்து வருகின்றனவெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அக்குழுவுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலேயே, இக்குழுவின் அட்டகாசம் அதிகரித்துள்ளதென, அவர் மேலும் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், ​நேற்று (27) நடைபெற்றது. இதன்போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆட்களை மிரட்டுதல் உள்ளிட்ட மக்களைத் தீண்டுகின்ற பல்வேறான அட்டகாசங்களை, கபாலி என்பவரும் அவரது குழுவினருமே மேற்கொண்டுவருகின்றனர். அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் சிலர் கைதுசெய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், அவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சில நாள்களில் மீண்டும் திரும்பி வந்துவிடுகின்றனர் என பொது அமைப்புகளால், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

திரும்பி வருகின்ற அவர்கள், தமது அட்டகாசங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர் என அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளனவென, சிறிநேசன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரால் உரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலையிலேயே, இந்தக் குழுவினரின் அட்டகாசம் அதிகரித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்படுமென, அவர் ​மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .