2026 மே 04, திங்கட்கிழமை

முதலாவது மரணத்துக்கு நேற்றுடன் ஓராண்டு நிறைவு

R.Maheshwary   / 2021 மார்ச் 29 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா-19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, முதலாவது மரணம் இடம்பெற்று. நேற்றுடன் (28) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயதான நபரே, 2020.03.28 ஆம் திகதியன்று மரணமடைந்தார். இதுவே முதலாவது மரணமாகப் பதியப்பட்டது.

இதுவரையிலும் 558 பேர் மரணமடைந்துள்ளனர். இது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, நூற்றுக்கு ஒரு சதவீதம் குறைவாகும்.

 
 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 88,623 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதில், நேற்று (28) மட்டும், 235 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைக்கு வரையிலும் 91,839 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், 2இ615 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .