2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முன்னாள் அத்தியட்சகருக்கும் ஜெயிலர்கள் ஐவருக்கும் பிணை

Editorial   / 2021 ஜனவரி 12 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதற்கு உதவி வழங்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நீர்கொழும்பு  சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உட்பட சிறைச்சாலையின் சிறைக்காவலர்கள் ஐவரையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (11) பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தால்  சந்தேக நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நேற்று (11)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிணை வழங்க உத்தரவிடப்பட்டது.

நீர்கொழும்பு  சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உட்பட சிறைச்சாலையின் நான்கு  சிறைக்காவலர்கள் மன்றில் ஆஜாகியிருந்தனர். ஆறாவது பிரதிவாதி மன்றில் ஆஜராகவில்லை.

பிரதிவாதிகளின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாந்து தலைமையிலான குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துலீப பீரிஸ் ஆஜராகியிருந்தார்.

சிறைச்சாலை அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ  உட்பட அனைவரும் தலா 5  இலட்சம் ரூபாய் கொண்ட இரு சரீரப் பிணைகளிலும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணைகளிலும்  விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையொப்பம் இடுவதற்கும் உத்தரவிடப்பட்டனர்.

இந்த வழக்கு மார்ச் மாதம் இரண்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .