Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வாகனங்கள், சொத்துக்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமர், புதிய அமைச்சரவையின் உறுப்பினர்களைத் தவிர முன்னாள் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எந்தவொரு நபரும் அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தின் கீழ் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம் வசம் உள்ள அனைத்து அரச வாகனங்கள், சொத்துக்களை உரிய அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு, கௌரவமாக கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்க தாமதமாகினால் பொலிஸாரைப் பயன்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி குறித்த வாகனங்கள் சொத்துக்களை மீளப் பெறுவதுடன், வாகனங்களை கையளிக்காதவர் எவறாயினும் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025