Editorial / 2026 மார்ச் 04 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான பட்டியலை விவசாய பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த பட்டியலை சபையில் பிரதி அமைச்சர் செவ்வாய்க்கிழமை (03) சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையான பதவி காலத்தில் வெளிநாட்டு பயணங்களுக்காக 357 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 38 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 200 கோடியே 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 7 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதோடு, அதற்காக ஒரு கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 16 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதோடு, அதற்காக 53 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago