2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

' முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு '

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒ​ரேயொரு உறுப்பினரை தொடர்புபடுத்திக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பது எப்படியான ஒழுக்கநெறி என்று தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, முன்மொழியப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்துக்கு தான் எதிர்ப்பை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் 71ஆவது தேசிய தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 வரை மட்டுபடுத்த வேண்டுமென்பதே மக்களின் பிரார்த்தனையாகும்.  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தேசிய அரசாங்கத்துக்கு செல்கின்றனர்.

தேசிய அபிவிருத்தியை  ஏற்படுத்துவதற்கு அரசியல் தலைவர் என்ற ரீதியில் தன்னால் முடியாமல் போயுள்ளது. தொடர்ந்து பொருளாதாரம் மந்த நிலையில் செல்வதற்கு மக்கள் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தால் பல விடயங்கள் கிடைத்தது செய்ய முடியாத விடயங்களும் செய்யப்பட்டது. எனினும் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .