2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முல்லைத்தீவில் கடற்படையினருக்கு கொரோனா பரிசோதனை

Editorial   / 2020 மே 01 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட படையினரில் 54 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை  என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.  

கடந்த 21 ஆம் திகதி வெலிசர கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாய்களுடன்; பயணித்த பேருந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர்கள் பலரை கொண்டுவந்து இறக்கிய நிலையில், இதில் பயணித்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து 71 படையினர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்படடது. இவர்களின் பரிசோதனை முடிவில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X