2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மூன்று ஓட்டங்களால் தோற்றது இலங்கை

Freelancer   / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20  கிரிக்கெட் போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணி  3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் Kamindu Mendis ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 65 ஓட்டங்களை பெற்றதுடன் Pathum Nissanka உபாதை காரணமாக வௌியேறிய நிலையில் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் Mohammad Nabi 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

எனினும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X