2025 ஜூலை 09, புதன்கிழமை

மேசையிலிருந்து விழுந்து 6 மாதக் குழந்தை பலி

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரன் பிரியங்கர

நவத்தேகம-மஹமெத்தேவ பிரதேசத்தில், ஆறு மாதக் குழந்தையொன்று, மேசையிலிருந்து தவறி விழுந்த நிலையில், நவத்தேகம வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நேற்று (26) மாலை உயிரிழந்துள்ளதாக, நவத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது, குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என, பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருந்தபோதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .