Princiya Dixci / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேட் இன் ஸ்ரீலங்கா (Made in Sri Lanka) வர்த்தகக் கண்காட்சி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (13) திறந்துவைக்கப்பட்டது.
இந்நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் சந்தை இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பைத் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள “மேட் இன் ஸ்ரீலங்கா” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, கொழும்பு 07 மன்றக் கல்லூரி மாவத்தையில் இந்த வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது.
கைத்தொழில் அமைச்சின் கீழ், தேசிய நிறுவன மேம்பாட்டு அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சி, இன்று மற்றும் நாளை (14) ஆகிய இரு தினங்கள் முற்பகல் 10 மணிமுதல் இரவு 8 மணிவரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
தேசிய மட்டத்தில் வர்த்தக கண்காட்சி ஊடாக இந்நாட்டு தொழில்முனைவோரை பலப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
மேட் இன் ஸ்ரீலங்கா எண்ணக்கருவினூடாக விற்பனை நிலையங்களை ஸ்தாபித்தல், இணைய வணிக மார்க்கத்தை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் வர்த்தக கண்காட்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
14 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
59 minute ago
3 hours ago