Editorial / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி( பா.ஜ.க) கையில் எடுத்துள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ( தி.மு.க.) இரட்டை வேடம் போடுவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி, திங்கட்கிழமை (01) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடத்தை பா.ஜ.க. அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிறப்புத்திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் என தெரிவித்துள்ளார்.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026