2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரணிலும் மஹிந்தவும் மாறி மாறிக் கருத்துகள்

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில், தன்னுடைய தரப்பு நியாயத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ள அதேநேரத்தில், இவ்விடயத்தில் நேர்மையாகச் செயற்படுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

 அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணிக்கு வெளியேயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், அரசாங்கத்தில் சேர்வதற்கு அழைப்பதாகத் தெரிவித்தார். 

மறுபக்கமாக, கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்‌ஷ, அரசாங்கம் நேர்மையை வெளிப்படுத்தி, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே அரசாங்கம் விரும்புகிறது எனத் தெரிவிக்க வேண்டுமெனவும், தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றக் கூடாது எனவும் தெரிவித்தார். 

அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள், தமது அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்தியமை குறித்துக் கடந்த காலங்களில் பெருமையாகக் கூறினர் என்பதை ஞாபகப்படுத்தியதோடு, இப்போது அவ்வெண்ணிக்கையை அதிகரிக்க முயல்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .