Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
52 நாள்கள் அரசாங்கம் உருவாக்கப்பட்டதாலேயே, தேசிய அரசாங்கம் சிதைவடைந்ததெனத் தெரிவிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி, வரவு-செலவுத் திட்டத்தை (பாதீட்டை) நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை இல்லாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடுமாறி க்கொண்டிருக்கின்றார் என்றார். கடந்த வருடம் ஒக்டோர் 26ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவான 52 நாள்கள் அரசாங்கம், சரியான திட்டமிடல் இல்லாமலே கவிழ்ந்துவிட்டதென பலரும் கூறுகின்றனர் எனத் தெரிவித்த அவர், அதனாலேயே தேசிய அரசாங்கத்தைக் கவிழக்க முடிந்து என்றார்.
கண்டியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த நேரத்தில் கிடைத்த பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தாலும் அன்று ஆட்சியை பொறுப்பேற்றதாலேயே இன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது” என்றார்.
அதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் முறியடிக்கப்பட்டதோடு, 133 என்ற சாதாரண பெரும்பான்மையை கூட இல்லாத பிரதமராக ஆக்கப்பட்டாரெனவும் தெரிவித்த அவர், தேசிய அரசாங்கம் கொண்டுவரவிருந்த பல இடைக்கால சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத வண்ணம் செய்துள்ளோம் என்றார்.
“தற்போது இடம்பெறும் ஐ.நா அமர்வுகளில் இலங்கை சார்பில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதி, ஐ.நா பரிந்துரைக்கமைவான சட்டத்திடங்களை, 52 நாள்கள் அரசாங்கத்தின் விளைவால், நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதென அறிவித்துள்ளார்” என்றார்.
இது இந்நாட்டு இராணுவத்தை ஆதரிக்கும் மக்கள் கண்ட வெற்றியெனவும், இதனாலேயே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் ரணில், தலையை சொறிந்துகொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
37 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
5 hours ago