2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ரயிலில் மோதி தாய் உயிரிழப்பு: மகள் காயம்

Gavitha   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய மகள் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, இந்தச் சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய தாய் இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய 12 வயதுடைய மகள், கடுகண்ணாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதெனிய வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X