2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரயில்வே திணைக்களம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை

Freelancer   / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

சுமார் 21,000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டிய ரயில்வே திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் மாத்திரமே கடமைகளில் ஈடுபடுவதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 250 இற்கும் அதிக ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ரயில்வே பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X