Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 டிசெம்பர் 23 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அழகன் கனகராஜ், பேரின்பராஜா திபான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தொகுப்புரைகள் சற்று முன்னர் நிறைவடைந்தன.
தொகுப்புரைகள், இன்று காலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, இன்னும் சொற்ப நேரத்தில், ஜூரிகளுக்கு தெளிவுரையளிப்பார். விசேட சிங்கள ஜூரிகள், 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். 23 ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியமளிப்புகள் இடம்பெற்றன.
சாட்சியமளிப்பு நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. வழக்கின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தொகுப்புரைகள் இடம்பெற்றன.
முன்னதாக, முறைப்பட்டாளர் சார்பில் ஆஜரான, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, காலை 10.48க்கு தனது தொகுப்புரையை ஆரம்பித்து, 20 நிமிடங்கள் மட்டுமே இடைவேளை வழங்கப்பட்ட நிலையில் தனது தொகுப்புரையை பிற்பகல் 2.05க்கு நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் மனைவியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பிற்பகல் 2.10க்கு தனது தெளிவுபடுத்தலை ஆரம்பித்து 2.40வரை நிகழ்த்தினார். அதன் பின்னர் பகல் போசனத்துக்காக நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு மாலை 3:38க்கு மீண்டும் ஆரம்பமானது. அதன் பின்னர் வழக்கின் 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே தனது தொகுப்புரையை 5:10 வரை நிகழ்த்தினார்.
அதனையடுத்து 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரட்ண 5:45க்கு தனது தொகுப்புரையை ஆரம்பித்து 8:22க்கு நிறைவு செய்தார். அதனையடுத்து 10 நிமிடங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
25 minute ago
35 minute ago