Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சியான சியம்பலாண்டுவ 'ரிவிதனவி' சூரிய மின்சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டன.
மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ, கொட்டியாகல பகுதியில் 500 ஏக்கர் காணியில் முன்னெடுக்கப்படவுள்ள 140 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான இந்த திட்டம், தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரத்தைச் சேர்ப்பதுடன், ஆண்டுதோறும் 219 கிகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
இந்த திட்டத்தின் ஊடாக டீசல் இறக்குமதியைக் குறைப்பதன் மூலமும், ஒவ்வொரு ஆண்டும் 150,000 மெட்ரிக் தொன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலமும் 21 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதன் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 70 வீத மின்சாரத்தைப் பெறுவதற்கான இலங்கையின் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .