2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்யப் பெண் துஷ்பிரயோகம்: கான்ஸ்டபிள்கள் கைது

Thipaan   / 2017 ஜனவரி 29 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த ரஷ்யப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் கான்ஸ்டபிள்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண், நேற்று மாலை வேளையில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரையோரப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸார், அவர்களைக் கைதுசெய்ய முயன்ற போது, அவர்கள் குறுக்கீடு செய்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டோர் கந்தளாய், மிரிஹான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை கல்கிஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .