2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ரோஹிதவின் திருமணத்தில் அர்ஜுன் அலோசியஸ்?

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகனான ரோஹிதவின் திருமண வரவேற்பு விழாவில், மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட, அர்ஜுன் அலோசியஸ் கலந்துக்கொண்டிருந்தாரென இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் தனக்கு கிடைத்துள்ளதுடன், அர்ஜுன் அலோசியஸுடன் அவரது மனைவியும் ரோஹித ஜோடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் எதிர்வரும் நாட்களில் தம்வசம் கிடைக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ நான் பொறுப்புடன் கூறுகின்றேன். என் மீது வழக்குத் தொடருங்கள். இதனால் தான்  நாமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் அர்ஜுன் அலோசியஸ் பற்றி அதிகம் திட்டுவதில்லை.“ என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .