Kogilavani / 2021 மார்ச் 17 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
தீ விபத்தினால் 20 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள், தோட்டத்திலுள்ள குயின்ஸ்லன் தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்கள், தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி கோவிந்தன் ஸ்தலத்துக்கு விரைந்து சேத விவரங்களைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். 

9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026