Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் குமிழ்கள் ஏற்படுதல் அதனையடுத்து, கேஸ் அடுப்புகள் வெடிக்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை பலரும் குறைத்துக்கொண்டுள்ளனர். இன்றேல், தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.
காஸ் வேண்டாம், விறகு அடுப்பே போதும் அல்லது மண்ணெண்ணை அடுப்பே போதுமென பலரும் நினைத்துவிட்டனர்.
எனினும், 3 நிபந்தனைகளின் கீழ், கேஸ் சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை, அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தும் வகையில், லிட்ரோ கேஸ் சிலிண்டர் நிறுவனம், அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அத்துடன், அந்த வகையான சிலிண்டர்களை விற்பனைச் செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துவிட்டது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரை நீங்கள், கொள்வனவு செய்பவர்களாயின்,
புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டிருக்கும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. பழைய சிலிண்டர்களில், சாதாரண பாதுகாப்பு உறை மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago