2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இளைஞர்கள் ஐவர் படுகாயம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

ஹொரவ்பொத்தான - கெப்பித்திகொள்ளாவ பிரதான வீதி வலியுபொத்தானப் பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த வான், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காயமுற்ற இளைஞர்கள் ஐவரும், அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தான, கிவுளக்கடைப் பகுதியைச் சேர்ந்த 18, 19, 22 வயதுடைய இளைஞர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்த ஹொரவ்பொத்தான பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .