Mayu / 2026 மே 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை சுமார் 3.30 மணியளவில், வற்றாப்பளையில் மேலதிக வகுப்பை (Extra Class) முடித்துவிட்டு தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவி ஒருவரே இந்த கிரிமினல்களின் இலக்காகியுள்ளார்.
இலக்கத்தகடு (Number Plate) இல்லாத ஒரு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள், கண் இமைக்கும் நேரத்தில் மாணவியின் கழுத்தில் இருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த வாரமும் இதே பகுதியில் கடைக்குச் சென்ற பெண்ணொருவரிடம் ஒரு பவுண் சங்கிலி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரங்கேறும் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களால் முள்ளியவளை மக்கள் கடும் கோபத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.
தற்போது முள்ளியவளை பொலிஸார் அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
வீதிகளில் இலக்கத்தகடு இன்றிச் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் மோட்டார் சைக்கிள்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago