Freelancer / 2021 ஜூன் 19 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி வந்துரம்ப பகுதியில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல் நலக்குறைவு காரணமாக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு, பாதுகாப்பு உத்தியோகத்தரும் அவரது மனைவியும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில், பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பத்தேகம சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுயில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரின் வீட்டில் மூன்று குழந்தைகள் உள்ளனர், அவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். R
19 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
38 minute ago