Freelancer / 2021 நவம்பர் 17 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்ரசேனவுக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லேயினால் அலரிமாளிகையில் வைத்து இன்று (17) வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, 2020 ஆம் ஆண்டுக்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி திருமதி.வஜிரா சித்திரசேனவுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து 2021 நவம்பர் 8ஆம் திகதியன்று இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்தினால் பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில் அவரது மகள் வத்சலா தசநாயக்க பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார்.
கலாநிதி பண்டித் டப்ளிவ்.ஏ.அமரதேவ, 2002ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜாகொப் உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலக அதிகாரிகள் மற்றும் கலாநிதி வஜிரா சித்ரசேனவின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

24 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
3 hours ago