2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தகக் கப்பலுடன் இலங்கை மாலுமிகள் 8 பேர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மாலுமிகள் 8 பேருடன் வர்த்தக கப்பல், ஐக்கியஅரபு எமிரேட்ஸ் நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல், ஐரோப்பிய கடற்பரப்பில் இப்போது நங்கூடமிடப்பட்டுள்ளதுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஐரோப்பிய கடற் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு குறித்த கப்பல் பயன்படுத்தப்படுவதாக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையையடுத்து இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக டுபாயிலுள்ள இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த வர்த்தக கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்றோ அது எதை நோக்கி பயணிக்கின்றது என்றோ, குறித்த கப்பல் கைப்பற்றப்பட்ட போது அதில் இருந்த பொருட்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள்  வெளிப்படுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X