Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானைக் கொன்றவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, கொழும்பிலிருந்து மாவனெல்ல பிரதேசம் வரையுள்ள சீ.சீ.டி.வி கமெராக்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக கொழும்பு, பம்பலப்பிட்டிய சனநெரிசல் மிக்க இடங்களிலுள்ள சீ.சீ.டி.வி கமெராக்களில் பதிவான காட்சிகளைச் சோதனை செய்திருந்தனர்.
வியாபாரியின் தந்தையிடம் கப்பம் கோரி, கேகாலையிலிருந்து கிடைத்த அலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரைத் துல்லியமாக அடையாளம் காணுவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 8 நபர்களிடம் விசாரணை செய்த பொலிஸாருக்கு, அதில் ஒருவர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார்.
அவரது சடலம், கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனெல்ல - ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வர்த்தகர் சுலைமானின் மரணம் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வர்த்தகர்கள் ஐவர், இந்நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுமுள்ளது.
வர்த்தகர் காணாமல்போனமை தொடர்பில் இதுவரையில், 30 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025