2025 ஜூலை 09, புதன்கிழமை

வர்த்தமானிக்கு எதிரான மனு 27 வரை ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை, நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்து ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட கட்டளைகள் உள்ளடங்களான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்து பார்த்தல், எதிர்வரும் 27ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுவை சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தாக்கல் செய்திருந்தார். மேற்படி மனு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று (11) அழைக்கப்பட்டது. இதன்போதே மேற்கண்டவாறு ​ஒத்திவைக்கப்பட்டது.  

மனுவில், பிரதிவாதிகளாக, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

இதேவேளை, நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட கட்டளைகள் உள்ளடங்களான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என, சட்டமா அதிபர், இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .