2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளாக நடித்தவர்கள் கைது

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தெரிவித்து பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில்  வைத்து இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

30, 39 மற்றும் 55 வயதுடைய குருநாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் வலான குற்றத்தடுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .