Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகனங்களை கொள்ளையிட்டு அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றி, போலி ஆவணங்களை தயார் செய்து, விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இரண்டு பேர், கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பேலியகொடை, விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து, போலி பதிவுச் சான்றிதழ், போலி அடையாள அட்டைகள் மூன்று, சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஊராபொல, கிரிந்திவெல பகுதிகளைச் சேர்ந்த 34,31 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .