2025 ஜூலை 26, சனிக்கிழமை

வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

Editorial   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாயோடு வாய் வைத்து மனைவி காப்பாற்றிய சம்பவ​மொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

புதுடெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் கேசவன், தயா என்ற தம்பதி பயணம் செய்தனர். ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, கணவர் கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வந்த ரயில்வே பொலிஸார் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய பொலிஸார் அறிவுறுத்தினர்.

அதன்படி, கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து தயா சிகிச்சை அளித்தார். இதையடுத்து கேசவன் சீராக மூச்சு விட்டார். அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய பொலிஸாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X