Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2022 மார்ச் 27 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் புதுப்பிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன, பயணம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
விடுமுறையில் செல்லும் நபர்கள், சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதால் அதைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் எனவும் எச்சரித்தார்.
வீடுகளில் யாரும் இல்லாததை இதன்மூலம் அறிந்துகொள்ளும் குற்றவாளிகள், வீடுகளை உடைத்து உள்நுழையப் பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியதுடன், எனவே தமது பயணங்கள் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருள் சோதனைகள் அதிகரிப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருள் வர்த்தகம் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
42 minute ago
56 minute ago