2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிகாலை வென்னப்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 8 மி.மீற்றர் நீளமான துப்பாக்கியும் 8 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியும் ரவைகளும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு- சிலாபம் வீதியில் நைனமடம் பாலத்துக்கருகில் இன்று அதிகாலை இடம்​பெற்ற கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், குறித்த காரை பொலிஸார் பரிசோதித்தப் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .