Janu / 2025 நவம்பர் 26 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அளுத்கம,யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் செவ்வாய்க்கிழமை (25) காலை துபாய் எமிரேட்ஸ் விமானமான EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களின் பயணப்பைகளை சோதனையிட்ட போது 119,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 595 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது மூவருக்கும் தலா 03 லட்சம் ரூபாய் மற்றும் 09 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நீதவான் உத்தரவிட்டார்.
டீ.கே.ஜி கபில

7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago