Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 09 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கோடியே 9 இலட்சத்துக்கு 17 ஆயிரத்து 496 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை, சட்டவிரோதமான முறையில் சிங்கபூருக்கு கடத்துவதற்கு முயன்ற இலங்கைப் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கபூருக்கு பயணமாகவிருந்தார்.
இன்று (09) அதிகாலை 3:30க்கு சிங்கபூரை நோக்கி பயணிக்கவிருந்த, சிங்கபூர் விமானச் சேவைக்குச் சொந்தமான எஸ்.கியூ-469 என்ற விமானத்திலேயே அவர் பயணிக்கவிருந்தார்.
யூரோ-50,000, ஐக்கிய மெரிக்க டொலர் 5,000 மற்றும் சிங்கபூர் டொலர் 149 ஆகியனவற்றையே, தன்னுடைய பயணப்பொதியில், செய்திதாள்களினால் மறைத்துவைத்து, எடுத்துச் செல்வதற்கு அவர் முயன்றார் என்று தெரிவித்த விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
36 minute ago