Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இன்று (20) முதல் சேவைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தூதரக விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகைத்தரும் சேவை நாடுநர்கள் மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 01 - தூதரக விவகாரப் பிரிவு, 0112 338 812 அல்லது 0112 338 843, பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212 215 970, பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262 223 182, பிராந்திய அலுவலகம், கண்டி 0812 384 410, பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372 225 941, பிராந்திய அலுவலகம், மாத்தறை 0412 226 697. (a)
5 hours ago
9 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
16 Aug 2025