2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வௌ்ளை வானில் கடத்தப்பட்டவர் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை - பெரலபனாதர நகரில் வைத்து, வௌ்ளை வானில் கடத்தில் செய்யப்பட்டிருந்த கூட்டுறவுச் சங்க ஊழியர், அத்துருகிரிய பிரதேசத்திலுள்ள இரகசிய இடமொன்றிலிருந்து, இன்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை - ஊறுபொக்க பகுதியில் கடமையாற்றும் கூட்டுறவுச் சங்க ஊழியரான, பெரலபனாதர என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் சுரங்க எதிரிசிங்க என்ற 45 வயதுடையவரே, நேற்று (19) வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

அவருடைய பிள்ளைகளை பாடசாலையில் விட்டுத் திரும்பிய போதே கடத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவரைக் கடத்தில் செல்வதற்காக வந்திருந்த இரு வெள்ளை வான்களில், இலக்கத் தகடுகள் காணப்படவில்லை எனவும் ஒரு வான், கொருபொலவிலிருந்து ஊறுபொக்க பகுதிக்கும் மற்றைய அதன் எதிர்த்திசை நோக்கியும் பயணித்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை, கடத்தப்பட்டவர் மீட்கப்பட்டதோடு, அவரைக் கடத்தியதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர் தற்போது, காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .