Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
தான் மதுபானம் அருந்தியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கத் தவறியமையினால், குறித்த விமானி, நேற்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.
பணியாட்தொகுதியினர் தாமதமானதால், ஜேர்மன் பிராங்பேர்டிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்த, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சுமார் 15 மணிநேரம் தாமதமாகியிருந்தது.
இந்த விமானம், அந்த விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டிருக்க வேண்டும். எனினும், சனிக்கிழமை காலை வரையிலும் அந்த விமானம் பிராங்பேர்ட் விமான நிலையத்திலேயே தரித்து நின்றுள்ளது.
பணியாட்தொகுதியினர் மதுபோதையில் இருந்தமையால் இந்த விமானம் பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தாக அறியமுடிகின்றது.
இதேவேளை, பிராங்பேர்ட் விமான நிலையம் இரவு வேளைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதனால், அந்த விமான நிலையம், சனிக்கிழமை திறக்கப்பட்டதன் பின்னரே கொழும்பை நோக்கி அந்த விமானம் புறப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், யு.எல் 554 என்ற விமானம், காலதாமதமானமைக்காக, பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தது.
அத்துடன், தாமதம் ஏற்பட்ட காலத்துக்கு தேவையான வசதிகளை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐரோப்பிய சங்கத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக பயணிகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், விமானியின் விமான ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
4 hours ago