2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ஸ்ரீ ல.சு.கட்சி- பொ.ஜ பெரமுன இணைந்தே தேர்தலில் போட்டியிடும்’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் தலைமையின் கீ​ழ் போட்டியிடும் கூட்டமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஜனவரி 17ஆம் திகதி தமது கட்சி பெரும்பான்மையுடனே நாடாளுமன்றத்துக்குச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .