2025 ஜூலை 09, புதன்கிழமை

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு மீண்டுமொரு புதிய தலைவர்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக  போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ. எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

திறைசேறியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகலவால் நேற்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விதானகே ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக மட்டுமின்றி போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றுவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த ரஞ்சித் பெர்ணான்டோ பதவி விலகியதையடுத்து, நேற்றைய தினம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றிய கபில சந்ரசேன புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே இன்று ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக, ஜீ. எஸ். விதானகே நியமிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .