R.Maheshwary / 2021 மார்ச் 31 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள், மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குறித்த கட்சியின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மஹா நாயக்கத் தேரர்களை நேற்று (30) சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய முகமொன்றை வழங்கி, எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கத்திலேயே, கட்சி மீளக் கட்டியெழுப்பப்படவுள்ளது என்றார்.
நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் எதிர்கால நலன் கருதியே, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
அந்த ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டே, கட்சி என்ற ரீதியில், எதிர்காலத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இந்நாட்டிலுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கத்தோலிக்கர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டி, இணைந்து செயற்படும் கட்சி என்ற அடிப்படையில் இந்தத் திட்டமிடல்கள் அமையுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .