J.A. George / 2021 ஜனவரி 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மெதிரிகிரிய நகரில் உள்ள ஹோட்டலில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 13 யுவதிகள் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 38 இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுவிடுக்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா வைத்திருந்த மூவர் ஹிங்குராங்கொட நீதிமன்றில் இன்று(18) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி குற்றச்சாட்டில் 54 பேருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிமன்றில் நாளை (19) வழக்கு தொடரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago