2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38ஆவது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)
மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38ஆவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை  கல்லூரி வளாகத்தில்  இடம்பெற்றது.

கல்லூரியின் பிரதம நிர்வாகி அஷ்ஷெய்க்  எஸ்.ஏ.ஜப்பார் தலைமையில் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க்  எம்.எம்.கரீம் நத்வியின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் செயலாளர் மௌலவி ஏ.எம்.எம். முபாறக்,  சர்வதேச நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எல்.எம். நௌபர், மாகாண கூட்டுறவுத்துறை பதிவாளரும் ஆணையாளருமான எம்.சீ.எம்.ஷெரீப், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே.எம்.ஹுஸைன்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் திறந்த, உள்ளக அரங்குகளில் இரு அமர்வாக இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் 'ஷரீஆ' கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 111 மாணவர்களுக்கு மௌலவி பட்டங்கள் வழங்கப்பட்ட அதேவேளை அல்-குர்ஆன் மனனப் பிரிவில் 24 மாணவர்களுக்கு அல்- ஹாபிழ் பட்டங்களும் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பிரதம நிர்வாகி, கல்லூரி அதிபர் ஆகியோருக்கு முறையே 'ஷேகுன் நத்வா', 'ஹாதிமுன் நத்வா' என்னும் சிறப்புப் பட்டங்களும் வழங்கப்பட்டன.

இதன்போது  பட்டமளிப்பு விழா சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .