2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சம்பூர் மின்சார சபைக்கு வருடத்திற்கு 7.3 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தும்'

Kanagaraj   / 2013 மே 13 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலிந்தி ஜயசுந்தர

சம்பூர் நிலக்கரி மின் நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஆண்டுக்கு 7.3 பில்லியன் ரூபா இலங்கை மின்சார சபைக்கு மேலும் நட்டம் ஏற்படும் என்று ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஏற்கனவே நட்டமடைந்துள்ள நிலையில் இன்னும் நட்டமடையும் என்றும் அவ்வமைப்பு நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இந்த மின் நிலையத்தை அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ள முறைக்கேடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பேச்சாளர் சமன் தேசப்பிரிய தெரிவித்தார்.

குறைந்தளவு வினைத்திறனுள்ள மின் உற்பத்தி தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தம் காரணமாக ஆண்டுக்கு 4.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் தரக்குறைவான அந்த தொகுதியை பாராமரிக்க ஆண்டுக்கு 1.2 பில்லியன் ரூபா கூடுதலாகவும் தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்,சம்பூர் மின் உற்பத்தியில் கிடைக்கும் இலாபம், சர்வதேச நியமனங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு 1.2 பில்லியன் ரூபா குறைவானதாகலாம்.

இந்த அடிப்படையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மொத்தமாக ஆண்டுக்கு 7.3 பில்லியன் ரூபா நட்டம் அடையவுள்ளது. இந்த நட்டத்தை இவ்வாறான பாதகமான ஒப்பந்தத்திற்கு காரணமான அதிகாரிகளிடமிருந்து அறவிடவேண்ம் என்றும் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டமைப்பானது மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X