2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தரம் 10, 11க்கு ஒரே வினாத்தாள்; கிண்ணியாவில் 2ஆம் தவணை பரீட்சையில் குளறுபடி

Menaka Mookandi   / 2013 ஜூன் 20 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

கிண்ணியா கல்வி வலய பாடசாலைகளில், கிண்ணியா அதிபர்கள் சங்கத்தால் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரண்டாம் தவணைப் பரீட்சையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பரீட்சைக்கு ஆயத்தமாக வந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை விட்டும் வெளியேறியுள்ளனர்.

இன்று 10ஆம் தரத்திற்கு தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற பாடத்துக்கான பரீட்சை நடைபெற்றது. இவ்வினாப்பத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்த மூன்று பகுதி வினாத்தாள்களுமே கடந்த வாரம் இதே கல்வி வலயத்தில் தரம் 11க்கு நடத்தப்பட்ட வினாத் தாள்களாகும்.

1ஆம் பகுதி 40 வினாக்களையும் 2ஆம் பகுதி 5 வினாக்களையும் 3ஆம் பகுதி 7 வினாக்களையும் கொண்ட இந்த மூன்று வினாப்பத்திரங்களிலும் தரம் 11 என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் மாத்திரமே தரம் 10 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தரம் என்ற சொல்லே மாறியிருக்கிறதே தவிர வினாக்கள் மாறவில்லை என பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் பாட ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

தரம் 10க்கும் தரம் 11க்கும் வேறு வேறு பாடத்திட்டம் இருக்கின்றதென்பதை கிண்ணியா அதிபர்கள் சங்கமும் கல்வி அதிகாரிகளும் இன்னும் அறியவில்லையா? என ஆசிரியர்களும் மாணவர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், இன்றைய பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவை வேறொரு  தினத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ள கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம், இது தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

  Comments - 0

  • A.M.Mulawfar Thursday, 20 June 2013 08:23 AM

    பாடத்திட்டம் பற்றி கேள்வி எழுப்புவது முன்னாள் பரீட்சை நடாத்துனர்களா மாணவர், ஆசிரியர்களா?

    Reply : 0       0

    kinniyan Saturday, 22 June 2013 03:35 PM

    இலாபம் பெறும் நோக்கத்துடனும் மாணவர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும் நடாத்தப்படும் பரீட்சையே அன்றி, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி நடாத்தப்படும் பரீட்சை அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X